1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 15 நவம்பர் 2017 (09:48 IST)

29 வகை காய்ச்சல்கள் உள்ளன: அமைச்சர் செல்லூர் ராஜூ!

29 வகை காய்ச்சல்கள் உள்ளன: அமைச்சர் செல்லூர் ராஜூ!

தாற்போது 29 வகையான காய்ச்சல்கள் உள்ளன என தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். எல்லா காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் இல்லை என்பதை தெளிவுபடுத்த அவர் இதை கூறியுள்ளார்.


 
 
கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலால் இறந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
 
இந்நிலையில் நேற்று சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அமைச்ச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் மதுசூதனன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது பேசிய அவர், மழை மட்டும் கொஞ்சம் ஒத்துழைப்புக் கொடுத்தால் சீரமைப்புப் பணிகளை வேகமாக முடித்து விடுவோம். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் டெங்குக் காய்ச்சல் என்கிறார்கள். டெங்கு இந்தியா முழுவதும்தான் இருக்கிறது.
 
மொத்தம் 29 வகையான காய்ச்சல்கள் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எந்தக் காய்ச்சல் வந்தாலும் அதை டெங்கு என்று சொல்லி விடுகிறார்கள். சென்னையில் இவ்வளவு மழை பெய்தும் எந்த இடத்திலும் நோய்த்தொற்று இல்லை. அந்தளவுக்கு நாங்கள் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம் என கூறினார்.