திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (10:51 IST)

ஆளுநர் ஆய்வு நடத்தியது ஆரோக்கியமான விஷயம்: அமைச்சர் செல்லூர் ராஜூ அடடா விளக்கம்!

ஆளுநர் ஆய்வு நடத்தியது ஆரோக்கியமான விஷயம்: அமைச்சர் செல்லூர் ராஜூ அடடா விளக்கம்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் கடந்த இரண்டு தினங்களாக அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்தி, வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்கு தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்பு தெரிவித்துள்ளார்.


 
 
ஆளுநர் ஆய்வு நடத்தியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த செயல் மாநில சுயாட்சிக்கு எதிரானது சட்டத்தை மீறிய வரம்பு மீறிய செயலாகும் என பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆனால் பாஜகவினர் இதற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.
 
பாஜகவினர் ஆதரவாக குரல் கொடுப்பது கூட பரவாயில்லை, ஆனால் எதிர்க்க வேண்டிய ஆளும் அதிமுகவினர் இதனை வரவேற்கின்றனர். இது அதிமுகவை பாஜக இயக்குவதை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டுகிறது. ஆளுநரின் ஆய்வை டேக் இட் ஈசி ஆக எடக்க வேண்டும் என கூறுகிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
 
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூவும் இதற்கு ஆதரவாக பேசியுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.
 
ஆய்வு செய்யும்போதுதான் தமிழக அரசின் செயல்பாடுகள் அவருக்குத் தெரியவரும். மேலும் மத்திய அரசிடம் பேசி ஆளுநர் தமிழகத்திற்குக் கூடுதல் திட்டங்களைப் பெற்றுத்தருவார், எனவே ஆளுநர் ஆய்வு செய்வது ஆரோக்கியமான விஷயம்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.