வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (13:58 IST)

மோடி, எடப்பாடியை கிண்டல் செய்து பாடல் - பாடகர் கோவன் மீண்டும் கைது

பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை கிண்டலடித்து பாடல் பாடியதாக மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
நாட்டுப்புற கலைஞரான கோவன் சமூக அக்கறை கொண்டவர். அதை தனது பாடல்களில் பிரதிபலித்து வருகிறார். குறிப்பாக, மாநில, மத்திய அரசுகளை விமர்சித்து அவர் இயற்றி பாடியுள்ள பாடல் விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவை.
 
ஏற்கனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ‘டாஸ்மாக்கை மூடு’ என்ற பாடல் வீடியோ வெளியிட்டதற்காக 2015ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்நிலையில், தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் சில நாட்களுக்கு முன்பு ரத யாத்திரை நடத்தப்பட்டது. அதைக் கண்டித்து கோவன் ஒரு பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை கோவன் விமர்சித்துள்ளார். 
 
இதைத் தொடர்ந்து திருச்சி போலீசார் இன்று அவரை கைது செய்துள்ளனர்.