செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 12 ஏப்ரல் 2018 (18:21 IST)

விடுதலை செய்தும் வெளியேற மறுத்த பாரதிராஜா: பெரும் பரபரப்பு

விடுதலை செய்தும் வெளியேற மறுத்த பாரதிராஜா: பெரும் பரபரப்பு
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் போராட்டம் செய்தனர் என்பதும், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர், சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பாரதிராஜாவை சற்றுமுன் காவல்துறையினர் விடுதலை செய்தனர். ஆனால் தன்னுடன் கைதான சீமான், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோரை விடுவித்தால் மட்டுமே வெளியே செல்வேன் என்று பாரதிராஜா கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
விடுதலை செய்தும் வெளியேற மறுத்த பாரதிராஜா: பெரும் பரபரப்பு
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் இன்று சீமான் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் பாரதிராஜா விடுதலை செய்யப்பட்டும் வெளியேற மறுத்ததால் அந்த திருமண மண்டபத்தில் பதட்டநிலை  உருவாகியுள்ளது.