திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (13:51 IST)

இந்தியா ராக்கெட் விடுகிறது, எதிர்க்கட்சிகள் பலூன் விடுகிறது: தமிழிசை

நேற்று பாரத பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்தபோது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி திமுகவினர்களும் அதன் தோழமை கட்சியினர்களும் பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் செல்லும்போது ஏராளமான கருப்பு நிற பலூன்களை பறக்கவிட்டு திமுகவினர் தெறிக்கவிட்டனர்.
 
இந்த நிலையில் பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன்களை எதிர்க்கட்சிகள் பறக்கவிட்டது குறித்து இன்று கருத்து கூறிய தமிழக பாஜக கட்சியின் தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'நவீன இந்தியா ராக்கெட்களை பறக்க விட்டு உலக அளவில் பெருமை பெற்று வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இன்னும் பலூன் விட்டு கொண்டிருக்கின்றனர்' என்று கூறியுள்ளார்.
 
மேலும் காவிரி பிரச்னையை தீர்த்து வைக்கத் தவறியவர்களே இப்போது நடைபயணம் செல்வதாகவும், உலக அளவில் செல்வாக்கு பெற்றுள்ள பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் எந்த வழியிலும் சிறுமைப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.