செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (15:51 IST)

பாமகவில் இருந்து கழண்டு திமுகவில் இணைந்த முக்கியஸ்தர்கள்!!

திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பாமகவை சேர்ந்து 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். 
 
பாமக கடந்த இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த போதே பலர் கட்சியில் இருந்து விலகினர். ஒருசில அதிருப்தியோடு கட்சிக்குள் இருந்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பாமகவை சேர்ந்து 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். 
 
ஆம், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் கோ.முத்துகுமார் தலைமையில், பாமகவைச் சேர்ந்த திருவள்ளூர் தெற்கு மாவட்ட அமைப்பு தலைவர் வி.எஸ்.தியாகராஜன், எஸ்.பரணிதரன், இளைஞர் அணி எம்.மோகன், 84வது வார்டு வட்ட தலைவர் விஜய், 84வது வார்டு துணைச் செயலாளர் டி.முத்து, சி.செல்வம், எம்.ஆதித்யா, ஆர்.பிரசாந்த், ராஜேஷ், புருஷோத்தமன், பூபாலன், சதீஷ், செந்தில்குமார், பிரபாகரன், கார்த்திக், அருளானந்தன், கே.வள்ளி, எஸ்.ராஜா, பி.கமலேஷ், அம்பத்தூர் கிழக்கு பகுதியை சேர்ந்த பாமகவினர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்.
 
பாமகவினர் மட்டுமின்றி எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய நிர்வாகிகளும்  திமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.