புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (16:12 IST)

ஓட்டுநர் உரிமம் இனி ஓராண்டிற்குள் புதுப்பிக்க வேண்டும்: வருகிறது புதிய சட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி தமிழகத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமம், ஓராண்டிற்குள் புதுப்பிக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் இருந்தது. இந்நிலையில் தற்போது புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓட்டுநர் உரிமம் புதிப்பிப்பதற்கான கால அவகாசம் 5 ஆண்டுகளிலிருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூரவத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி சாலை விதிமுறைகளுக்கான அபராதம் இரு மடங்காக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது காலாவதியான ஓட்டுனர் உரிமம் புதிப்பிப்பதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.