ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (15:34 IST)

நீட் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யா கைது..

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வான வழக்கில் மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சீப் மெடிக்கல் ஆஃபிஸ்ராக பணிபுரிந்து வந்தவர் வெங்கடேசன். இவரது மகனான உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளது சமீபத்தில் தெரியவந்தது.

இது குறித்து மருத்துவ கல்லூரியின் டீன், அளித்த புகாரின் பேரில் விசாரனை நடைபெற்றது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர் தனது குடும்பத்துடன் தலைமறைவானதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனிடையே மாணவர் சார்பாக முன் ஜாமீன் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது.

இந்நிலையில் தற்போது உதித் சூர்யாவையும் அவரது குடும்பத்தையும் தனிப்படை தேடி வந்த நிலையில் உதித் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.