தொடர்புடைய செய்திகள்
- கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடக்கம்..! மாணவ மாணவிகள் உற்சாகம்..!
- டிஎன்பில் கிரிக்கெட்: கோவை, சேப்பாக் அணிகள் அபார வெற்றி..!
- ஷாரூக்கான், சுரேஷ் குமார் அதிரடி; மதுரைக்கு அணிக்கு இமாலய இலக்கு கொடுத்த கோவை கிங்ஸ்..!
- DP வைக்கும் மாணவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் எச்சரிக்கை
- பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியின் ஜாமீன் மனு தள்ளுபடி
கோவை அருகே தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு..!
கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அதில் பணி செய்த ஐந்து பேர் பரிதாபமாக பலியாகினர்.
கோவை குனியமுத்தூர் என்ற பகுதியில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சுவரின் கட்டுமான பணியில் போது இந்த விபத்து நடந்ததாகவும் இந்த விபத்தில் வடமாநிலையில் தொழிலாளர்கள் ஐந்து பேர் பலியாகி இருப்பதாகவும் மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுற்றுச்சுவர் விழுந்த இடத்தில் மீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரடியாக பார்த்து ஆய்வு செய்தார்
இதனை அடுத்து இந்த கட்டிடப் பணிகளில் விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் ஐந்து பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
