1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kirubananda variyar birthday is govt function

கிருபானந்த வாரியார் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் தகவல்

வாரியார்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். இதனை அடுத்து கடந்த ஜனவரி 28ஆம் தேதி தைப்பூச தினம் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாள் இனி அரசு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
கிருபானந்த வாரியார் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 25ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இனிமேல் கிருபானந்த வாரியார் பிறந்த நாளான ஆகஸ்டு 25ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளது அவரது பக்தர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இதனை அடுத்து முதல்வர் பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
அடுத்த கட்டுரையில்
வெளியானது டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள்!