ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (09:29 IST)

இன்று முதல் 5ஆம் கட்ட பிரச்சாரம் செய்யும் முதல்வர்: சசிகலா குறித்து பேசுவாரா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்று முதல் அடுத்த கட்ட பிரசாரம் செய்ய உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நான்கு கட்ட பிரச்சாரங்களை ஏற்கனவே முடித்த நிலையில், இன்று முதல் ஐந்தாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்குகிறார் 
 
இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சாரம் தொடங்கும் எடப்பாடி பழனிச்சாமி போரூர் அம்பத்தூர் ஆவடி மாதவரம் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார் 
 
நாளை சசிகலா பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் நிலையில் சசிகலா குறித்து தனது பிரச்சாரத்தில் அவர் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் அடுத்தகட்ட பிரச்சாரத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது