தொடர்புடைய செய்திகள்
- ஒரு ஆண்டுக்குள் புதிய ரயில் நிலையம்; கலகலக்கும் கிளாம்பாக்கம்!
- திடீரென வளைந்த ரயில் தண்டவாளம்.. தாம்பரம் நோக்கி செல்லும் ரயில் சேவை பாதிப்பு..!
- பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத ஒரு மோசமான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது- ஓபிஎஸ் டுவீட்
- திடீரென பேருந்துகளை சிறைப்பிடித்த பயணிகள்.. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு..!
- விரைவு ரயில்னா அதுக்குன்னு இப்படியா..? சீக்கிரமாக வந்து பயணிகளை ஏற்றாமல் சென்ற ரயில்!
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு ரயில் நிலையம்.. ரூ.20 கோடி மதிப்பீடு..!
சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கம் என்ற பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த பேருந்து நிலையத்திற்கு புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் இன்னும் நான்கு மாதங்களில் தொடங்க இருப்பதாகவும் இதற்கு ரூபாய் 20 கோடி செலவு மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கும் கிளாம்பாகத்திற்கு அதிக அளவில் பயணிகள் வருவார்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கான வரைபடம் தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு மாதத்தில் இந்த ரயில் நிலையத்திற்கான டெண்டர் கோரப்பட்டு நான்கு மாதங்களில் கட்டுமான பணி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
முதல் கட்டமாக 40 லட்ச ரூபாய் நிதியை ரயில்வே நிர்வாகத்திற்கு சிஎம்டிஏ வழங்க உள்ளது என்றும் மூன்று நடை மேடைகள் கொண்ட கிளாம்பாக்கம் ரயில்வே நிலையத்தின் கட்டுமான பணிகளை ஓர் ஆண்டுக்குள் முடிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva
