1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 அக்டோபர் 2021 (10:10 IST)

கரூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள்!

கோப்புப் படம்

கரூர் மாவட்டத்தில் உள்ள லாலா பேட்டை என்ற பகுதியில் ஆடு மேய்க்க சென்ற சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள புனாசி பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கவின் வசந்த் மற்றும் நவீன். இதில் கவினும் வசந்தும் சகோதரர்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து அருகில் உள்ள பன்னீர்செல்வம் என்பவரின் நிலத்தில் ஆடுகளை மேய்க்க ஓட்டிச் சென்றுள்ளனர். அந்த நிலத்தில் சாலைப் பணிகளுக்காக மண்ணெடுத்து இருந்ததால் மழை நீர் தேங்கி குளம் போல இருந்துள்ளது.

இந்நிலையில் ஆடுகள் குளத்தில் இறங்கியதைப் பார்த்த சிறுவர்கள் அவற்றை காப்பாற்ற குளத்துக்குள் இறங்கியுள்ளனர். ஆனால் ஆழம் காரணமாக அவர்கள் மூவரும் குளத்தில் மூழ்கி இறந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.