1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:40 IST)

பிறந்தநாள் நிகழ்ச்சியில் குளிர்பானம் அருந்திய சிறுமிக்கு வாந்தி மயக்கம்!

பிறந்தநாள் நிகழ்ச்சியில் குளிர்பானம் அருந்திய சிறுமிக்கு வாந்தி மயக்கம்!
பிறந்த நாளின் போது குளிர் பானம் அருந்திய சிறுமி திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக குறைந்த விலையில் விற்பனையாகும் குளிர்பானங்களை அருந்தி சிறுவர்-சிறுமிகள் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் கரூர் பகுதியில் உள்ள தரணி என்ற சிறுமி பிறந்தநாளை அடுத்து குளிர்பானம் அருந்தி உள்ளார்.இதனையடுத்து அவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்
 
தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அவர்கள் விசாரணை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது