1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kid who drunk allout liquid died

சென்னையில் ஆல் அவுட் கொசுவிரட்டியை குடித்த சிறுவன் உயிரிழப்பு!

சமூகவலைதளம்
சென்னை அடுத்த பம்மலில் கிஷோர் என்ற மூன்று வயது சிறுவன் ஆல் அவுட் திரவத்தை தெரியாமல் குடித்துள்ளான்.

பல்லாவரம் பகுதிக்கு அருகில் இருக்கும் பம்மல் என்ற பகுதியில் உள்ள தமிழரசன் என்பவரின் மூன்று வயது மகன் கிஷோர். கடந்த ஞாயிறன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவன் தெரியாமல் ஆல் அவுட் திரவத்தைக் குடித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியான அவனின் பெற்றோர் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் அளித்த சிகிச்சையில் குழந்தையின் நிலைமை மோசமானதாக சொல்லப்படுகிறது. இதனால் பெற்றோர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால்தான் குழந்தை உயிர் இழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
About Writer
mahendran
அடுத்த கட்டுரையில்
ஆயுத பூஜையால் பூக்கள் விலை உயர்வு! – பொதுமக்கள் அதிர்ச்சி!