இன்று நிறைவு பெறுகிறது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள். அமைச்சர் உதயநிதி பங்கேற்பு..!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்றுடன் இந்த போட்டிகள் நிறைவடைகிறது. இன்றைய இறுதி நாளில் சில போட்டிகள் நடைபெற்ற பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சமீபத்தில் தொடங்கி வைத்தார் என்பதும் இந்த விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு அணி மிக சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்றைய கேலோ இந்தியா போட்டி சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வந்த 6வது கேலோ கேள்வி இந்தியா போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.
இன்றைய இறுதி நாளில் கால்பந்து, நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் ஆகிய நான்கு போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை அடுத்து இன்று மாலை ஆறு மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிறைவு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மாநில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva