வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (11:14 IST)

சனாதனம் குறித்து சர்ச்சை பேச்சு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன்..!

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன்  அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பே நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசிய போது ’டெங்கு, கொசு போன்று சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது 
 
அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்தன.  இந்த நிலையில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில்  இந்த வழக்கில் பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆதராக அமைச்சர் உதயநிதிக்கு பாட்னா நீதிமன்றம் சமன் அனுப்பியுள்ளது.  
 
வழக்கறிஞர் சவுசலேந்திர நாராயணன் என்பவர் அமைச்சர் உதயநிதி மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran