வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (10:33 IST)

அதிமுகவில் விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர்.. பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈபிஎஸ்..!

ADMK
விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பின் தென் தமிழக தலைவராக இருந்த கதிர்வேல் என்பவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பின்னர் அதிமுகவிலிருந்து பாஜகவிற்கும் பாஜகவில் இருந்து அதிமுகவுக்கும் தாவும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகை கௌதமி அதிமுகவுக்கு வந்த நிலையில் தற்போது விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பின் தென் தமிழக தலைவர் கதிரவன் என்பவர் அதிமுகவில் இணைத்துக் கொண்டார் 
 
இவர் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வந்த நிலையில் தற்போது அவர் திடீரென அதிமுகவிற்கு தாவியது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த கதிரவன் விஸ்வ ஹிந்து பரிஷத் தென் தமிழக தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டதாகவும் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளதாகவும் இனி அதிமுக தான் தனது கட்சி என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran