தேர்தல் ஆணையத்திற்கு சீமான் கடிதம்
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தமிழகத் தேர்தல் ஆணையத்திற்கு சீமான் கடிதம் எழுதியுள்ளார்.
விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், நாம் தமிழர் என்ற கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இது நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தமிழகத் தேர்தல் ஆணையத்திற்கு சீமான் கடிதம் எழுதியுள்ளார்.