1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (19:05 IST)

திராவிட மாடல் அரசு என்று கூறிக்கொள்ள வெட்கமாக இல்லையா?அண்ணாமலை

annamalai
திமுக அரசின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில், ''மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து வெளியிட்ட திமுக அரசு'' என்று   அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.
 
இந்த நிலையில், மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து வெளியிட்ட திமுக அரசு என்று   அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
 
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாக வெற்று அறிவிப்புகள் மூலம் விளம்பர ஆட்சி மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் திமுக மீண்டும் ஒருமுறை வாக்களித்த மக்களை மண்குதிரை பட்ஜெட்  மூலம் நட்டாற்றில் நிறுத்தியிருக்கிறது.
 
மத்திய அரசின் நலத்திட்டங்களை தமிழக பட்ஜெட்டில் எவ்வாறு பெயர் மாற்ற  முயற்சித்திருக்கிறார்காள் என்று குற்றம்சாட்டி, ஐம்பது ஆண்டுகளில் ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோது இதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்த திமுக தற்போது ஓடி வந்து திராவிட மாடல் அரசு என்று கூறிக்கொள்ள வெட்கமாக இல்லையா? ''என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
மேலும், இந்த அறிக்கையில்,  பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.