செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 10 ஜூலை 2021 (19:49 IST)

சபாஷ். இதை விட ஒரு அருமையான தேர்வு இருக்க முடியுமா? கஸ்தூரி டுவிட்

சபாஷ் இதைவிட ஒரு நல்ல தேர்வு இருக்க முடியாது என தமிழக அரசின் நடவடிக்கை குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் ஐ லியோனி அவர்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் புதிய தலைவராக நியமனம் செய்தார். திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் இந்த பதவிக்கு மிக பொருத்தமானவர் என்றும் ஏற்கனவே அவர் சிறந்த ஆசிரியராக இருந்தவர் மட்டுமின்றி இலக்கியச் சொற்பொழிவாளர் என்றும் தமிழை நன்கு அறிந்தவர் என்றும் தமிழில் புலமை பெற்றவர் என்றும் இந்த நியமனத்திற்கு பாராட்டு குவிந்து வருகின்றன
 
ஆனால் கஸ்தூரி இந்த நியமனத்தை வஞ்சப்புகழ்ச்சி செய்துள்ளார். கஸ்தூரி தனது டுவிட்டரில் தமிழக பாடநூல் நிறுவன தலைவராக ஐ.லியோனி நியமனம்.சபாஷ்.  இதை விட ஒரு அருமையான தேர்வு இருக்க முடியுமா. இனிமேல் நாம் பாடப்புத்தகங்களில் திமுக வரலாறு, திக்ஜவின் சமூக அறிவு, திரைப்படங்கள் மற்றும் பெண்கள் குறித்து எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.