திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 அக்டோபர் 2018 (19:37 IST)

மெட்ரோ ரயிலில் தனியாக பயணம் செய்த நடிகை கஸ்தூரி

சென்னை மெட்ரோ ரயில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மக்களின் பயன்பாட்டுக்கு வந்து அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சேவையின் அளவு நீடிக்கப்பட்டு வருகிறது.

மக்களின் வரிப்பணத்தில் இருந்து சுமார் 23ஆயிரம் கோடி செலவு செய்து முடிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால் போதிய வருமான இல்லை என்பது மிகப்பெரிய சோகம். கட்டணம் அதிகம் என்பதால் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினர் மெட்ரோ ரயில் பக்கம் செல்வதே இல்லை.

இந்த நிலையில் இன்று நடிகை கஸ்தூரி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாக புகைப்படத்துடன் கூடிய பதிவை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதில் கொடுமை என்னவெனில் அந்த மெட்ரோ ரயிலில் கஸ்தூரி ஒருவர் மட்டுமே பயணம் செய்தார் என்பதும் அவரை தவிர அந்த ரயிலில் ஒருவர் கூட பயணம் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ ரயில் நிர்வாகம் கட்டணத்தை குறைத்தால் மின்சார ரயில் போன்று அதிகளவிலான மக்கள் பயன்படுத்துவார்கள் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.