வடசென்னை ஆபாச காட்சிகளை மாற்றி அமைத்த வெற்றிமாறன்

Last Updated: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:19 IST)
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் தயாரித்து வெளிவந்த படம் வடசென்னை. இந்தப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் படத்தில் ஆண்ட்ரியா மற்றும் அமீர் இடையே தோன்றும் காதல் காட்சிகள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டது என மீனவ சமுதாய நண்பர்கள் குற்றம் சாட்டியதால். அவர்களது மனதை புண்படுத்தாத நோக்கில் அக்காட்சிகளை உடனே நீக்கினார் இயக்குனர் வெற்றிமாறன்.
 
தற்போது நீக்கிய காட்சிகளுக்கு பதிலாக புதிய இரண்டு காட்சிகளை சேர்த்து திரையில் வெளியிடப்போவதாக செய்திகள் வலம் வருகிறது. இக்காட்சிகளும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :