புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (13:58 IST)

சர்கார் படத்துக்கு தடை இல்லை –சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும் சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வருண் (ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வருண் ராஜேந்திரன் என்பவர் சர்கார் படத்தின் டீசர் வெளியானதும் இது தனது செங்கோல் கதையின் காப்பியாக இருக்கும் என சந்தேகித்து தென்னிந்திய கதையாசிரியர்கள் சங்கத்தில் புகாரளித்தார். இதை விசாரித்த கதாசிரியர்கள் சங்கத்தலைவர் கே பாக்யராஜ் இரண்டும் கதையும் ஒன்றே எனக் கூறினார்.

இதையடுத்து வருண் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சர்கார் படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதையெதிர்த்து தங்கள் கருத்தை கேட்காமல், இந்த படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்ற நீதிமன்றம் இன்று விசாரித்தது. விசாரனையின் முடிவில் சர்கார் படத்திர்கு இடைக்காலத்தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார். வரும் 30 தேதிக்குள் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இந்த மனுவிற்குப் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சர்கார் திரைப்படம் அறிவித்தப்படியே தீபாவளி அன்று வெளியாவது உறுதியாகி உள்ளது.