1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A women committed suicide due to dowry problem

ஏண்டி நக போடல: மருமகளை டார்ச்சர் செய்து சாவடித்த மாமியார்

சென்னை
சென்னையில் மாமியாரின் வரதட்சணைக் கொடுமையால் மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அருள் பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அருள் பிரியா தன் பெற்றோரின் சம்மதத்தை மீறி திருமணம் செய்து கொண்டதால், அவர்கள் அருள் பிரியாவிற்கு நகை போடவில்லை.
 
இதனால் அருள் பிரியாவின் மாமியார், அவரை தரக்குறைவாக பேசியுள்ளார். உங்க வீட்ல நகை போடுறதுக்கு கூட வழி இல்லையா என்றெல்லாம் அவர் மனம் புண்படும்படி பேசியுள்ளார். இதனால் விரக்தியின் எல்லைக்கு சென்ற அருள்பிரியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
இதுகுறித்து அருள்பிரியாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து அவர்கள் நந்தகுமாரிடமும் அவரது தாயாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
ஒரு கோடி கொள்ளை: திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்