அம்பானி வீட்டு கல்யாணத்துலையும் அதை பண்ணுவீங்களா? ஸ்டாலினுக்கு கஸ்தூரி கேள்வி

mk
Last Updated: வியாழன், 14 பிப்ரவரி 2019 (10:01 IST)
ஹிந்து திருமணங்கள் குறித்து சர்ச்சையான வகையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்து முறைப்படி நடைபெறும் திருமணங்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட பல அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
stalin
இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த முகேஷ் அம்பானி தன் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி நடக்க இருக்கும் திருமணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நேரில் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சென்றார்.
kas
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் ஸ்டாலினுக்கு எந்த கல்யாணத்துக்கு போனாலும் இந்த உரை தான் போலிருக்கு. அடுத்து அட்டென்ட் பண்ண போறது அம்பானி வீட்டு கல்யாணம் – அங்கேயும் புகை, சமஸ்க்ருத மந்திரம், ப்ராஹ்மண புரோகிதர்கள் எல்லாம் இருப்பாங்களே என கேள்வி எழுப்பியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :