ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 பிப்ரவரி 2019 (15:22 IST)

கஸ்தூரி அட்ராசிட்டி - கமல், ஸ்டாலின் இருவரையும் கலாய்த்து டிவிட்

நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் கமல், ஸ்டாலின் ஆகிய இருவரையும் கலாய்க்கும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல், திமுக, அதிமுக ஆகிய இருக்கட்சிகளும் ஊழல் கறைபடிந்தவையே, அதனால் இருக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை என அறிவித்திருந்தார். அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக திமுக வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கமலை பூம் பூம் மாட்டுக்காரன் போல சித்தரித்து கேலிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. திமுக – கமல் இடையிலான இந்த கருத்துமோதல் தமிழக அரசியலில் கவனம் பெற்றது.

இதையடுத்து திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத்திருமணத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின், கமல் இருவரும் அரசியல் நாகரிகம் கருதி அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பும் மக்களிடம் கவனம் பெற்றது. இந்த இரு சம்பவங்களையும் வைத்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் திமுகவையும் திராவிடக் கொள்கைகளையும் கேலி செய்யும் விதமாக ஒரு டிவிட்டைப் பகிர்ந்துள்ளார்.

அந்த டிவிட்டில் ’மதிமாறனை தோழராக்கி கமலை கழுதையாக்கி , பூம் பூம் மாடாக்கி நாயாக்கி நரியாக்கி திராவிடத்தின் ஒரே பாதுகாவலர்கள் என பிதற்றுபவர்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று பதறுகிறார்கள் கதறுகிறார்கள். முரசொலிக்கும் வலிக்குமென்றால் குற்றம் குறுகுறுக்குதென்றே தோணுதய்யா !’  என்ற டிவிட்டைப் பகிர்ந்துள்ளார். ஆனால் இந்த ட்விட்டின் மூலம் திமுக தனது கேலிக் கட்டுரையின் மூலம் தாங்களும் ஊழல் கட்சிதான் என்பதை நிரூபித்துவிட்டது என்பது போல கமலின் மைண்டவாய்ஸ் சொல்வது போல பதிவிட்டுள்ளார். ஆனால் இதைவ் வழக்கம்போல கமலின் புரியாத டிவிட்டர் ஸ்டேட்டஸ் போலப் போட்டு கமலையும் கேலி செய்துள்ளார்.

இதன் மூலம் கமல், ஸ்டாலின் ஆகிய இருவரையும் ஒரே டிவிட்டில் கஸ்தூரி நக்கலடித்திருப்பதாகவும் டிவிட்டர்வாசிகள் கருத்து கூறி வருகின்றனர்.