வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 ஜூலை 2022 (23:31 IST)

திமுக அரசினை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக சார்பில் உண்ணாவிரதம்

bjp
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மக்களிடம் கொடுத்த  வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்து  ஒராண்டாகியும் நிறைவேற்றாத திமுக அரசினை கண்டித்தும்,  இதை விட்டு விட்டு கரூரில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியதாக கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசை கண்டித்தும் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று காலை கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்று வருகின்றது.

கரூர்  மாவட்ட பாஜக தலைவர் V.V.செந்தில் நாதன்  தலைமையில்  தொடங்கிய இந்த உண்ணாவிரதம் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக. கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் மாநில இணை பொருளாளர்  சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
 
இந் நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல் தலைவர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தில் பங்கேற்று வருகின்றனர். கரூர் மாவட்ட பாஜக வரலாற்றில் பல்வேறு பாஜக தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதத்தினால் கரூர் ஸ்தம்பித்துள்ளது. கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன், திமுக அரசுக்கு தனது முழு எதிர்ப்பினை காட்ட கருப்பு சட்டை அணிந்துள்ளார்