1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Karunas removed party leaders from his movement

புலிப்படை நிர்வாகிகளை களையெடுத்த கருணாஸ் - பின்னணி என்ன?

Karunas
நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் தனது பேரவை நிர்வாகிகளை கூண்டோடு நீக்கியுள்ளார். 


 

 
நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, இரட்டை இலை சின்னத்தில் திருவாடானை தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
 
ஜெ.வின் மறைவிற்கு பின், சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளிகாக உடைந்தது. அப்போது, தன்னை சசிகலாவின் ஆதரவாளராக செயல்பட்டார்.
 
இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிர்வாகிகளை கூண்டோடு அவர் இன்று நீக்கியுள்ளார். அந்த அமைப்பில், அதிகாரபூர்வ அனுமதிக் கடிதம் இன்றி பலர் நிர்வாகிகளாக செயல்பட்டதால் அவர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது. அந்த அமைப்பின் மாவட்ட, ஒன்றிய, நகர புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
வீட்டை வெளியே பூட்டிகொண்டு 4 வருடங்களாக உள்ளே இருந்த தாய் மகள்: டெல்லியில் அதிர்ச்சி!!