விஷால் அலுவலகத்தில் எதற்காக ரைட்? பொங்கும் கருணாஸ்!!
வடபழனியில் உள்ள நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலின் அலுவலகத்தில் ஜிஎஸ்டி நுன்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து தவறான கருத்துகள் கொண்ட வசனம் இடம் பெறுவதாக தமிழிசை சவுந்தராஜான் போர்க்கொடி தூக்கினார்.
அவரை தொடர்ந்து ஹெச்.ராஜா, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர். மேலும், மெர்சல் படத்தை தான் இணையத்தில் பார்த்ததாக ஹெச்.ராஜா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் விஷால், மக்கள் அறிந்த தலைவராக இருக்கும் ஹெச்.ராஜா இப்படி வெட்கமில்லாமல் கூறலாமா? இதற்கு அவர் பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலயில், விஷால் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சுமார் மூன்று மணி நேரமாக நடைபெறும் வரும் இந்த சோதனை, விஷாலின் தயாரிப்பு நிறுவனம் வரி முறைக்கேட்டில் ஈடுபட்டிருக்கிறதா? என்ற கோணத்தில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து, நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கருத்து தெரிவித்து உள்ளார். விஷால் நிறுவனத்தில் நடக்கும் சோதனை அதிர்ச்சி தருகிறது.
தவறான நடவடிக்கைகளை விமர்சித்ததால் சோதனை நடத்துகிறார்கள். அரசை எதிர்த்து எந்த கருத்தையும் சொல்லக்கூடாதா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.