செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2017 (16:46 IST)

விஷால் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி சோதனை - அடுத்து விஜய்?

வடபழனியில் உள்ள நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலின் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி நுன்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


 

 
விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்துகள் கொண்ட வசனம் இடம் பெறுவதாக தமிழிசை சவுந்தராஜான் போர்க்கொடி தூக்கினார். அவரைத் தொடர்ந்து ஹெச்.ராஜா, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
 
அந்நிலையில், மெர்சல் படத்தை தான் இணையத்தில் பார்த்ததாக ஹெச்.ராஜா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் விஷால், மக்கள் அறிந்த தலைவராக இருக்கும் ஹெச்.ராஜா இப்படி வெட்கமில்லாமல் கூறலாமா? இதற்கு அவர் பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், வடபழனியில் உள்ள விஷாலின் அலுவலகத்தில் மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விஷாலின் அலுவலகம் ஜி.எஸ்.டி-ஐ முறையாக செலுத்தியுள்ளதா என மொத்தம் 3 அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு சோதனை செய்து வருகிறார்கள்.
 
தற்போது அந்த அலுவலகத்தில் விஷால் மற்றும் அவரது மேலாளர்கள் யாரும் அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது.
 
இது விஷாலுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து விடும் மிரட்டல் தொனியாகவே கருதப்படுகிறது.