தவெக ஆட்சிக்கு வந்தா விஷம் குடிச்சி சாகணும்!.. கோபப்பட்ட கருணாஸ்!...
நடிகரும் முக்குலத்தோர் புலி படை கட்சியின் தலைவருமான கருணாஸ் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தையும், நடிகர் விஜயின் பேச்சுக்களையும் விமர்சனம் செய்து வருகிறார்.
போன தேர்தல் வரை அதிமுகவை ஆதரித்து வந்த கருணாஸ் ஒரு கட்டத்தில் திமுகவின் ஆதரவாளராக மாறினார்.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் ஒரு வீடியோ பார்த்தேன்.. அதில் ஒரு பெண் என் கணவர் விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் அவரை விஷம் வைத்து கொன்று விடுவேன் என பேசியிருக்கிறார். இதை பார்த்தாலே பயமாக இருக்கிறது அந்த பெண் அவரின் கணவருக்கு மட்டும் விஷம் வைப்பாரா இல்லை குடும்பத்தினருக்கே வைப்பாரா, இல்லை அருகில் வசிப்பவர்களுக்கும் சேர்த்து விஷம் வைப்பாரா என்பது தெரியவில்லை.
இப்போதே இப்படி பேசுகிறார்கள் என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாரும் விஷம் குடிக்க வேண்டுமா என்பது தெரியவில்லை. தற்குறிகள் என்று சொன்னால் கோபப்படுகிறார்கள். ஆனால், அவர்களின் பேச்சும், சிந்தனையும் இப்படித்தான் இருக்கிறது என்று சொன்னர்.
மேலும் முக்குலத்தோர் படைக்கு திமுகவில் அதிக தொகுதிகள் கொடுத்தால் போட்டியிட என்னிடம் வேட்பாளர்கள் இல்லை.. எனக்கு ஒரு தொகுதி கொடுத்தால் நான் போட்டியிடுவேன்.. அப்படி எனக்கு சீட் கொடுக்கவில்லை என்றாலும் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்.. ஏனெனில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாட்டிற்குள் வந்து விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்
என்று தெரிவித்தார்.