வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (20:34 IST)

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

Karunanithi
சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் ஏஐ தொழில் நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரையாற்றினார். 
 
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கலந்து கொண்டார். 
 
விழா தொடங்கியதும், மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மேடையில் அமர்ந்து இருப்பது போல ஏஐ தொழில் நுட்பம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரு பெரிய இருக்கைகளில் கருணாநிதி, ஸ்டாலின் அமர்ந்துள்ளது போல ஏஐ மூலம் காட்சியமைப்பு செய்யப்பட்டு இருந்தது. 
 
தொழில் நுட்பத்தின் மூலம் உரையாற்றிய கருணாநிதி, திமுகவை ஆட்சியில் கம்பீரமாக ஸ்டாலின் அமர வைத்துள்ளதாகவும், ஸ்டாலின் என்றாலே உழைப்பு உழைப்பு உழைப்புதான் எனவும் தெரிவித்தார். கழக பணியில் 55 ஆண்டுகளாக அயராது உழைப்பவர் என ஏஐ தொழில் நுட்பம் மூலம் கருணாநிதி உரையாற்றுவது போல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

 
முப்பெரும் விழாவில் கருணாநிதியின் குரல் ஒலித்ததை கேட்டதும் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.