செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (13:30 IST)

சபரிமலை விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை: கேரளா முதல்வர் உறுதி

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து கேரள அரசு இந்த தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது. இந்த தீர்ப்புக்கு இந்து அமைப்பினரும், ஆண் ஐயப்ப பக்தர்கள் பலரும் போராட்டத்தில் இறங்கினர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்டு கட்சி, படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு சபரிமலை விவகாரமே காரணம் என பாஜகவினரும் காங்கிரஸாரும் கூறி வருகின்றனர். ஆனால் இதனை கேரள முதல்வர் பினராயி விஜயன் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்ததற்கு சபரிமலை விவகாரமே காரணம் என யாரும் நினைக்கத் தேவையில்லை. சபரிமலை விவகாரம் என்றைக்கும் எங்களை பாதிக்காது” என கூறியுள்ளார்.

மேலும், அந்த பேட்டியில், ”சபரிமலை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதே எங்கள் நிலைபாடு. நமது நாடு அரசியல் சட்டப்படியே ஆளப்படுகிறது:” எனவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.