செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2019 (08:59 IST)

அன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காந்தியவாதியான அன்னா ஹசாரே காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, ஊழலுக்கு எதிராக போராடி வந்தவர். ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்.

அவருக்கு நெஞ்சு பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாலும், உடல் பலவீனம் காரணமாகவும் நேற்று பூனே அருகிலுள்ள வேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை குறித்து கூறுகையில், பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை எனவும், அவர் நலமாக இருப்பதாகவும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.