செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (13:49 IST)

காரைக்குடியில் பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரம்: டிஎஸ்பி, வட்டாட்சியர் பணியிட மாற்றம்!

periyar
காரைக்குடியில் பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டிஎஸ்பி மற்றும் வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வழியாக உள்ளன. 
 
திராவிட கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் புதிதாக வீடு கட்டியிருந்த நிலையில் தனது வீட்டின் சுற்றுச்சுவர் முன் பெரியார் சிலையை வைத்திருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்த வருவாய்த்துறையினர், காவல் துறை டிஎஸ்பி கணேஷ்குமார் துணையோடு சேர்ந்து பெரியார் சிலையை அகற்றினர்.
 
இந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆன நிலையில் தற்போது துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார் மற்றும் வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran