செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2023 (13:02 IST)

பெரியார் சிலையை அகற்றிய காவல்துறை: சிவகங்கை அருகே பரபரப்பு!

periyar
சிவகங்கையில் பாஜக பிரமுகர் எச் ராஜா வீட்டின் அருகே வைக்கப்பட்ட பெரியார் சிலையை திடீரென காவல்துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சிவகங்கையில் உள்ள எச் ராஜா வீட்டின் அருகே திராவிடர் விடுதலை விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர் கட்டிய புதிய வீட்டின் சுற்றுச்சுவரில் தந்தை பெரியாரின் சிலை வைக்கப்பட்டிருந்தது.
 
இந்த சிலைக்கு எச் ராஜா தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த சிலையை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் எச். ராஜாவின் வீட்டு அருகே திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர் வைத்த தந்தை பெரியாரின் மார்பளவு சிலையை வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அகற்றியதாகவும் இதனால் அந்த பகுதிகள் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் பெரியார் சிலை அகற்றப்படுவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva