செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (16:29 IST)

மேலும் ஒரு திமுக வேட்பாளருக்கு கொரோனா: யார் அவர்?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்/ இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி காரைக்கால் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் நாஜிம் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் அவ்வப்போது கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன