ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை: துணிக்கடையில் குவிந்த கூட்டம்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் ஜவுளிக்கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை தருவதாக விளம்பரம் செய்ததை அடுத்து, அந்த சட்டையை வாங்க கூட்டம் குவிந்ததால் அந்த பகுதியில் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று புதிய ஜவுளிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையறிந்த அந்த பகுதி மக்கள் ஒரு ரூபாய் சட்டையை வாங்க கடைமுன் வெள்ளம் போல் திரண்டனர்.
முதலில் வரும் 599 பேர்களுக்கு மட்டுமே ஒரு ரூபாய் சட்டை வழங்கப்படும் என்பதால் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் ஒரு ரூபாய் சட்டையை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் சாலை போக்குவரத்து முடங்கியது. இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த போலீசார் போக்குவரத்தை சரிசெய்து கடைக்கும் பாதுகாப்பு வழங்கினர்.
கோடிக்கணக்கில் செலவு செய்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதற்கு பதில் இதுமாதிரி உத்திகளுடன் திய கடைகள் செயல்பட்டால் எளிதில் மக்கள் மத்தியில் கடை விளம்பரம் ஆகும் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி