புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2019 (18:52 IST)

நயன்தாரா படத்தை புரமோஷன் செய்யும் புளுசட்டை மாறன்!

ஒரு படம் ரிலீஸ் ஆகிவிட்டால் அந்த படத்தின் குறைகளை பூதக்கண்ணாடி போட்டு பெரிதாக்கும் விமர்சகர்களில் ஒருவர் புளூசட்டை மாறன். இவர் ஒரு படம் நன்றாக இருப்பதாக கூறிவிட்டால் அது உலக அதிசயம். இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'ஐரா' படத்தை புளூசட்டை மாறன் புரமோஷன் செய்துள்ளார். 
 
நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் 'ஜிந்தாகோ' என்ற பாடல் இன்று வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் சற்றுமுன் இந்த புரமோஷன் வீடியோ வெளியானது. 46 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில் புளூசட்டை மாறன் கிட்டத்தட்ட 10 வினாடிகள் வந்து வசனம் பேசுகிறார். இவர் இந்த படத்தை விமர்சனம் செய்வது போன்றே இந்த புரமோஷன் வீடியோவில் உள்ளது
 
நயன்தாரா , கலையரசன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.