திருச்சியில் துணிக்கடைகளை கொளுத்திவிட்ட பாஜக தொண்டர்கள்

fire
Last Modified வெள்ளி, 24 மே 2019 (19:13 IST)
பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை வெடி வெடித்து கொண்டாடிய பாஜகவினரால் நான்கு துணிக்கடைகள் எரிந்து சாம்பலாகின.

மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தில் பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்தில் நான்கு துணிக்கடைகள் உள்ளன. வெற்றிபெற்றதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பாஜகவினர் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ளனர். பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ துணிக்கடையில் பரவி மற்ற கடைகளுக்கும் பரவியுள்ளது. தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் முழுவதும் எரிந்து நாசமடைந்தன. இதில் கோபம் கொண்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிறகு போலீஸார் அங்கு வந்து இரு தரப்பினரிடையே பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :