ப்ளூ சட்டை மாறனை பங்கமாக கலாய்த்த ரியோ! "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா" ட்ரைலர்!

Last Updated: திங்கள், 3 ஜூன் 2019 (14:04 IST)
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளிவந்துள்ளது. 
 
நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. படத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ப்ளாக் ஷீப் சித்து உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஹீரோயினியாக விமானப் பணிப்பெண்ணான பிரபல மாடலிங் அழகி ஷிரின் காஞ்ச்வாலா நடித்துள்ளார். 
 
ஷபீர் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார் கார்த்திக் வேணுகோபாலன்.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடெக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலரை சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. 
 
நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே தயாரித்த ‘கனா’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. எனவே, அடுத்ததாக அவர் தயாரிக்கும் இந்த படமும் நல்ல வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :