இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து, ரூபாய் 87.21 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மந்த நிலை மற்றும் வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளில் ஒரு நிலையற்ற போக்கு இருந்து வருகிறது.
மேலும், அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதால், இந்திய ரூபாயும் ஏற்ற இறக்க நிலையை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், வங்கிகள் இடையே அன்னிய செலவாணி சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 87.37 ஆக தொடங்கி, வர்த்தகத்தின் இடையில் 87.17 ஆக உயர்ந்து இறுதியில் 10 உயர்ந்து 87.21 ஆக வர்த்தகம் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிந்த நிலையில், இன்று 10 காசுகள் உயர்ந்துள்ளது.
Edited by Siva