தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!
தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததை குறித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர், "தமிழக முதல்வர் இந்த திட்டத்தில் கையெழுத்திட முன்வந்த போது, சூப்பர் முதல்வர் அதை தடுத்துவிட்டார்" என்றும், "தமிழக அரசு தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை வஞ்சிக்கிறது" என்றும் பேசினார்.
மேலும், "திமுகவினர் அநாகரிகமானவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் நாளடைவில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். மக்களுக்கு அவர்கள் நேர்மையாக இல்லை" என்றும் தெரிவித்திருந்தார்.
அவருடைய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர். கடும் கண்டனத்தை அடுத்து, தற்போது "தமிழக எம்பிக்கள் மனம் புண்பட்டிருந்தால், 100 முறை மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்" என்று மாநிலங்களவைகள் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
Edited by Siva