1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kanimozhi angry with udhayanidhi stalin?

இடத்தை மாற்றிய அமைச்சர் உதயநிதி.. உச்சகட்ட கடுப்பில் கனிமொழி?

kanimozhi
மார்ச் 10ஆம் தேதி கனிமொழி தலைமையில் மதுரையில் மாபெரும் மகளிர் மாநாடு நடத்த இருந்த நிலையில் திடீரென அந்த மாநாட்டை திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த கனிமொழிக்கு இது குறித்த தகவல் சொன்னபோது எதற்காக இடத்தை மாற்றினீர்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் மாவட்ட நிர்வாகிகள் சரியாக பதில் சொல்லாத நிலையில் கடைசியில் மேலிட உத்தரவு தான் காரணம் என்று கனிமொழிக்கு தெரிய வந்ததும் உச்சகட்ட கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் அந்த மேலிடம் உதயநிதி தான் என்றும் கனிமொழிக்கு தெரியவந்ததை அடுத்து தன்னை தான் திமுகவிலிருந்து ஒதுக்கப்படுகிறோமா என்ற சந்தேகம் அவருக்கு வருவதாக தெரிகிறது

ஏற்கனவே திமுக தலைமை மீது கனிமொழி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் திடீரென மதுரை மாநாட்டை ஏன் திண்டுக்கல்லுக்கு மாற்றினார்கள் என்று காரணம் புரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
ராமதாஸ் மகள் வீட்டில் ரகசிய சந்திப்பு.. பாஜக கூட்டணியில் இணைகிறதா பாமக?