அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ஒரு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை-அமைச்சர் பி.மூர்த்தி!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக ஏழை, எளியோர்,மாற்றுத் திறனாளிகள், நரிக்குறவர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட 1332 பயனாளி களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வாடிப்பட்டியில் நடைபெற்றது
மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா ஆணைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர்:-
கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. மேலும் தி.மு.க பொறுப்பேற்றவுடன் அன்று முதல் இன்று வரை மக்களின் நலனில் முழு அக்கறை காட்டி ஒவ்வொரு திட்டங்களையும் செயல் வடிவங்களாக மாற்றி செய்யப்பட்டு வருகிறது.
அரசு அதிகாரிகளை தேடி மக்கள் சென்ற நிலை மாறி இன்று மக்களை தேடி அதிகாரிகள் வந்து மனுக்களை பெற்று மக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக மக்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு செயல்பட்டு வருகிறது.
மகளிர் நலனில் அக்கறை கொண்டு மகளிர் சுய உதவிக்குழுகடனுதவி
இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை என்று திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும் மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 5ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது அதிலும் சோழவந்தான் தொகுதியில் மட்டும் அதிக அளவு1332 அவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்