மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விபூதி விநாயகர் சிறப்புகள்..!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள விபூதி விநாயகர் சிறிய சிலை என்றாலும் மிகவும் பிரபலமானவர். கோவிலுக்குள் நுழைந்ததும் பக்தர்கள் இந்த விநாயகரை தான் தரிசனம் செய்வாரக்ள்
மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளத்தின் தென்மேற்கு கரையில் விபூதி விநாயகர் சிலை அமைந்துள்ளது. இந்த விநாயகருக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே விபூதி அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
பூசம், மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் நட்சத்திர நாட்களிலும், பிரதமை, சதுர்த்தி, திரயோதசி, அமாவாசை, பவுர்ணமி தினங்களிலும் விபூதி விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடுவது உண்டு.
'விபூதி' என்றால் 'மேலான செல்வம்' என்று பொருள். எனவே இந்த விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் பெருஞ்செல்வம் வந்து சேரும் என்பது நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
Edited by Mahendran