1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (17:57 IST)

மேலும் ஒரு குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதா? காஞ்சிபுரம் பகுதியில் பதட்டம்..!

வேங்கை வயல் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி குடிநீர் தொட்டியிலும் மலம் கலக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுபினாயூர் என்ற பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100 மாணவர்களுக்கு மேல் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீர் தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை தான் மாணவர்கள் அருந்தி  வருகின்றனர். 
 
இந்த நிலையில்  இன்று மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறுவதற்கு முன்பாக குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதை போன்ற துர்நாற்றம் அடித்துள்ளதாக செய்திகள் பரவியது. 
 
இதனை அடுத்து ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதை நிறுத்தினர். இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva