வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 நவம்பர் 2023 (10:25 IST)

பிரபந்தம் பாடுவது யார்? மீண்டும் முட்டிக்கொண்ட வடகலை – தென்கலை!

Vadakalai Thenkalai
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் மீண்டும் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல் எழுந்துள்ளது.



காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சுவாமி வீதி உலா சமயத்தில் பிரபந்தம் பாடுவது நடைமுறை என்றாலும் அதை யார் பாடுவது என்பதில் அடிக்கடி வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல் எழுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது சுவாமி உலாவின் போது தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாட அதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு பிரிவினருக்கிடையே வாக்குவாதம், மோதல் எழுந்தது. உடனடியாக அங்கு வந்த போலீஸார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் இருபிரிவினருமே பிரபந்தம் பாட அனுமதி அளிக்கப்பட்டு சமரசம் செய்யப்பட்டு சுவாமி உலா போலீசார் பாதுகாப்புடன் நடந்தது. இந்த வடகலை – தென்கலை மோதலால் சுவாமி வீதி உலாவில் சற்று நேரம் பரபரப்பு எழுந்தது.

Edit by Prasanth.K