திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (10:45 IST)

6 - 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு எப்போது? அட்டவணை வெளியீடு

கடந்த சில நாட்களுக்கு முன்னர்  10, 11, 12 ஆகிய பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணை வெளியான நிலையில் தற்போது  6 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு   அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அரையாண்டு  தேர்வு நடைபெறும்

6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும்

அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் டிசம்பர் 23  தேதி முதல் ஜனவரி 1  தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும். ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Edited by Mahendran